தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 சரிந்து ரூ.36,000க்கு விற்பனை..

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.4,500க்கும், ஒரு சவரன் ரூ.36,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.