முக்கிய செய்திகள்

அதிமுக தலைவர்களை டிவிட்டரில் சீண்டும் துக்ளக் குருமூர்த்தி..


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இருவரையும் துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி கேவலமாக விமர்சித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தோல்வியடைந்ததையடுத்து, அதிமுகவின் கட்சி பதவியிலிருந்து தினகரன் ஆதரவாளர்கள் 9 பேரை முதல்வர் மற்றும் துணை முதல்வர் அதிரடியாக நீக்கினர்.

இந்த நடவடிக்கைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி,”ஆறு மாதங்களுக்குப் கழித்து ஆர்.கே.நகர் தோல்விக்குப் பிறகு 9 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்கள்.” என்று பதிவிட்டு அந்தப் பதிவில் முதல்வரையும் துணை முதல்வரையும் அசிங்கமாக ஆண்மையற்றவர்கள் என்று குறிப்பிட்டார். இதையடுத்து, அவருக்கு அதிமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.