முக்கிய செய்திகள்

மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு : கடலோர காவல்படை மீது வழக்குப்பதிவு..


இந்திய எல்லைப்பகுதி கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர காவல்படையினர் நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பிச்சை மற்றும் ஜான்சன் ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் இந்திய கடலோர காவல்படையினர் மீது இந்திய தண்டனை சட்டத்தின் 279, 307 மற்றும் கொடூர ஆயுதத்தால் சுடுதல் போன்ற பிரிவுகளின் கீழ் தமிழக கடலோர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.