முக்கிய செய்திகள்

ஐபிஎல் : சென்னை அணியில் மீண்டும் தோனி…


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் மகேந்திர சிங் தோனி இடம்பிடித்துள்ளார். அணியில் 3 வீரர்களை தக்கவைக்க முடியும் என்பதால் தோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா ஆகியோரை சென்னை அணி மீண்டும் தக்க வைத்துள்ளது. இதையடுத்து சென்னை அணியின் கேப்டனாக மீண்டும் தோனி செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல்., 2018 தொடரில் விளையாடும் அணிகள் எந்த வீரர்களை தக்க வைக்க உள்ளது என்ற பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

2008 முதல் இந்தியாவில் நடந்து வரும் மிக முக்கிய உள்ளூர் போட்டியாக இந்திய பிரிமியர் லீக் போட்டி திகழ்ந்து வருகின்றது.

11வது ஆண்டில் காலடி எடுத்து வைக்க உள்ள ஐபிஎல் போட்டி, அணிகள் முன்னதாக விளையாடிய வீரர்கள் அதிகபட்சம் மூன்று பேரை தக்க வைத்துக்கொள்ள முடியும். அந்த வகையில் இன்று அணிகள் தக்க வைத்துக்கொள்ளும் வீரர்கள் பட்டியல் வெளியானது.

சென்னை சூப்பர் கிங்ஸ் :
தோனி – 15 கோடி
சுரேஷ் ரெய்னா -11 கோடி
ஜடேஜா – 7 கோடி

டெல்லி டேர்டெவில்ஸ் :
கிறிஸ் மோரிஸ் – 7.1 கோடி
ரிஷப் பண்ட் – 8 கோடி
ஸ்ரேயாஸ் ஐயர் – 7 கோடி

கிங்ஸ் லெவன் பஞ்சாப் :
அக்ஸர் படேல் – 6.75 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் :
சுனில் நரேன் – 8.5 கோடி
ஆண்ரே ரசல் – 7 கோடி

மும்பை இந்தியன்ஸ் :
ரோகித் சர்மா – 15 கோடி
ஹர்திக் பாண்டியா – 11 கோடி
ஜஸ்பிரிட் பும்ரா – 7 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ் :
ஸ்டீவன் ஸ்மித் – 12 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
விராட் கோலி – 17 கோடி
டிவில்லியர்ஸ் – 11 கோடி
சர்ஃபரஜ் கான் – 1.75 கோடி

சன் ரைசஸ் ஐதராபாத்
டேவிட் வார்னர் – 12.5 கோடி
புவனேஸ்வர் குமார் – 8.5 கோடி

ஒவ்வொரு அணியும் மேற்கண்ட வீரர்களை தக்கவைத்து 2018 ஐபிஎல் போட்டியை எதிர்கொள்ள உள்ளன,