முக்கிய செய்திகள்

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : ஐ.எஸ் பொறுப்பேற்பு…


ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே 11 பேரை கொன்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். நஹ்ரவான் (( Nahrawan )) நகரில் ஆள் நடமாட்டம் அதிகமுள்ள மார்க்கெட் பகுதியில் நுழைந்த 5 தீவிரவாதிகளில் இருவர் தங்களின் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பொதுமக்கள் 11 பேர் உயிரிழந்தனர். 35 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள், துணை ராணுவப்படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.