சூரியனை ஆய்வு செய்ய விண்ணில் சீறிப் பாய்ந்தது ஆதித்யா-எல்1 விண்கலம்…

சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக PSLV C-57 ராக்கெட் மூலம் இன்று காலை 11:50 மணிக்கு விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல் 1 விண்கலம்.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டது. ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் விண்கலம் ஏவப்பட்டது. சூரியனைப் பற்றி ஆய்வில் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு அடுத்து 3-வது நாடாக இந்தியா இணைகிறது.