முக்கிய செய்திகள்

இத்தாலியில் முறைப்படி கரம் கோர்த்த கோலி – அனுஷ்கா ஜோடி!


பல ஆண்டுகளாக காதலித்து வந்த கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் இன்று இத்தாலியில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இவர்களது திருமணம் குறித்து செய்திகள் வெளியாகி வந்தது.

ஆனால், திருமணம் தொடர்பாக இருவரும் எந்த தகவலும் தெரிவிக்காமல் அமைதி காத்து வந்தனர். ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் கோலி-அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் மற்றும் மற்ற தகவல் அடங்கிய செய்தியை வெளியிட்டுள்ளனர். இத்தாலியில் உள்ள மிலன் நகரில் விருஷ்கா அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். திங்கள் கிழமை காலை இதற்கான அனைத்து ஏற்பாடுகளும், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் நடந்துள்ளது.

 மேலும், பஞ்சாபி முறையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு பஞ்சாபி நடையில் விருஷ்கா திருமணம் நடந்து முடிந்துள்ளது. மிலன் நகரில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் திருமணத்திற்கான அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் செய்துள்ளது. அழைப்பிதழ் கொண்டு வருபவர்களை மட்டும் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளே செல்ல அனுமதி அளித்துள்ளனர்.

மும்பையில் வரும் 21  ம் தேதி உறவினர்களுக்காகவும், 26ம் தேதி பிரபலங்நகளுக்டகாகவும்க்க வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக இருகுடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.