முக்கிய செய்திகள்

கலைஞர் மறைவு : அமெரிக்க நாளிதழ்களில் செய்தி..


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி மறைவு குறித்த செய்தியை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட், நியூயார்க் டைம்ஸ் மற்றும் பிபிசி நியூஸ் உள்ளிட்ட நாளிதழ்கள் வெளியிட்டுள்ளன.

கருணாநிதியின் அரசியல் வாழ்க்கை, சினிமாவில் அவரது பங்களிப்பு, மருத்துவமனை முன் குழுமிய தொண்டர்கள் குறித்த போட்டோ, கருணாநிதியை, பிரதமர் மோடி சந்தித்த போட்டோ, கருணாநிதி மறைவிற்கு பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியை உள்ளடக்கி இந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக அரசியலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளியில் திமுக தலைவர் கருணாநிதியும் காலமாகியுள்ளதால், பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது.