முக்கிய செய்திகள்

காரைக்காலில் மாப்பிள்ளை அழைப்புடன் மாங்கனி திருவிழா தொடங்கியது…


காரைக்கால் பாரதியார் வீதியில் கோயில்கொண்டு காரைக்கால் அம்மையார் அருள்பாலித்து வருகிறார். இவரின் வாழ்க்கை வரலாற்றை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இக்கோயிலில் ஒரு மாதக்காலம் மாங்கனித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று மாலை மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்கியது. நாளை பரமதத்தருக்கும்,புனிதவதி அம்மையாருக்கும் திருக்கல்யாணம் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் பிச்சாண்டி தோற்றத்தில் கைலாசநாதர் வீதியுலாவர மாங்கனி இறைத்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.