காரைக்குடியில் காங்., சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் வெற்றிக் கொண்டாட்டம்..

 

காரைக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் மற்றும் இமாச்சல் பிரதேசம் சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அகில இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவரும் மூத்த தலைவருமான திருமதி சோனியா காந்தியின் 76-வது பிறந்தாளை முன்னிட்டும்,இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக் கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டும், தற்போது நடைபெற்ற இமாச்சல் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியை முன்னிட்டும் காரைக்குடி கல்லுாரி சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு முன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி வழங்கி உற்சாகமாக்கொண்டாடினர்.

மேலும் காரைக்குடியில் அமைந்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற காங்கிரஸ் அலுவலகத்தில் கேக் வெட்டி காங்கிரசார் கொண்டாடினர். விழாவில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி, நகரத் தலைவர் பாண்டி மெய்யப்பன், குமரேசன்,பட்டமங்கலம் பெருமாள்,சண்முகதாஸ்,பாலா,ஜெபி,இரமேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் அமுதா, அஞ்சலி தேவி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்