காரைக்குடியில் பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டி…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள கல்லுப்பட்டி சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நடந்து வரும் பார்வைத் திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முதலாம் ஆண்டு தேசிய அளவிலான ஃபிடே செஸ் போட்டியை ஊக்கப்படுத்தும் வகையில் காரைக்குடி பெரியார் சிலை அருகில் மவிழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சேதுபாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தாளாளர் டாக்டர் சேது குமணன் தலைமை தாங்கினார்.

காரைக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் கலையரசி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.இயக்குனர் கோபால் முன்னிலை வகித்தார்.

காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள தேவர் சிலை வரை நடைபெற்ற இப்பேரணியில் நூற்றுக்கணக்கான பார்வைத்திறன் குறைபாடுள்ள செஸ் வீரர்,வீராங்கனைகள்,விவசாய கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பாதாகைகளை ஏந்திச் சென்றனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்