முக்கிய செய்திகள்

சமூக நீதிக்கு போராடியவர் கலைஞர் : சோனியா இரங்கல்..


திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம்:

கருணாநிதி மறைவு, பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் போன்ற ராஜதந்திரியை பார்க்க முடியாது.

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் கருணாநிதி பெரிய தலைவர். சமத்துவம், சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.

தந்தையை போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.