முக்கிய செய்திகள்

நெருப்போடு விளையாடுகிறது கேரள அரசு : அமித்ஷா ஆவேசம்..

கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் நிர்வாகக் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்துக் கொண்டிருப்பதாக கூறுகிறார் அமித் ஷா.

இதனிடையே பாஜக தலைவர் அமித்ஷாவின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

அரசியல் சாசனம் அனுமதித்துள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான கொள்கைகளை அமித் ஷா கொண்டிருப்பதையே இது உணர்த்துவதாகவும் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்

சபரிமலையின் புனிதத்தைக் காக்கும் பக்தர்களின் பக்கம் பாஜக நிற்கிறது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்

கேரள மாநிலம், கண்ணூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கேரளாவில் மத நம்பிக்கைக்கும், அரசின் நிர்வாகக் கொடுமைக்கும் இடையே போராட்டம் நடந்து கொண்டிருப்பதாகவும்,

நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் மாநிலத்தின் முதலமைச்சர் பினராயி விஜயன் நெருப்போடு விளையாடுவதாகவும் அவர் தெரிவித்தார்.