கேரளா உள்ளாட்சி தேர்தல் இடதுசாரி முன்னணி-காங்கிரஸ் இடையே கடும் போட்டி.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. கிராம ஊராட்சிகளில் 401 இடது சாரிகள் முன்னிலையில் உள்ளன . 326 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கின்றன.
நகராட்சி தேர்தலில் 39-ல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இடதுசாரி கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

மாவட்ட ஊராட்சிகளில் 10 -ல் இடது சாரி முன்னணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் மன்னிலையில் உள்ளது.
4 மாநகராட்சியில் இடதுசாரி முன்னிலை வகிக்கிறது.

2 மாநகராட்சியில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
தனித்து போட்டியிட்ட பாஜக மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து வருகிறது