ஒரு ஆண்டில் 20ஆயிரம் பள்ளிகள் மூடல்..: 2.5 லட்சம் ஆசிரியர்கள் வேலையிழப்பு ..

வேலையிழப்பு ..
கடந்த ஒரே ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசியர்களும் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
நாடு முழுவதும் கடந்த ஒரே ஆண்டில் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசிரியர்களும் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகிலேயே அதிக அளவில் பள்ளிகள் மற்றும் மாணவர்களை கொண்ட நாடுகளில் இந்தியா முதன்மையானது. நாடு முழுவதும் சுமார் 15 லட்சம் பள்ளிகளில் ஏறக்குறைய 26 கோடி மாணவர்கள் பயின்று வருகிறார்கள். மாநிலங்கள் தங்களுக்கான கல்வித் திட்டத்தை தாங்களே வகுத்து வருகிறார்கள். இதனால் மாநிலங்களுக்கிடையே கல்வியின் நிலை மற்றும் தரத்தில் மாற்றங்கள் இருந்தாலும் நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கல்வித் திட்டம் பின்பற்றப்படுகிறது.

இதை மேலும் ஒருமுகப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை வகுத்து அதன்படி ஒரே நாடு, ஒரே கல்வி என்கிற கெள்கையை கொண்டு வரக் காத்திருக்கிறது. இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கூடுதல் கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+)என்கிற அமைப்பு மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பிராந்திய வாரியாக தகவல்கள் சேகரிக்ககப்பட்டு வருகிறது. அப்படி தகவல் சேகரிக்கும் போது தான் நாடு முழுவதும் 20 ஆயிரத்தற்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுமார் இரண்டரை லட்சம் ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். அதிலும் மூடப்பட்ட பள்ளிகளில் 95 விழுக்காடு தனியார் பள்ளிகள் என்கிற கூடுதல் தகவலும் வெளியாகியுள்ளது.