மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்


 

20 ஆம் நூற்றாண்டின் மகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் லத்தீன் அமெரிக்க படைப்பாளியான காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார்.

பல நூற்றாண்டுகளாக மூடுண்ட நிலமாக இருந்த லத்தீன் அமெரிக்க மக்களின் வாழ்வையும், கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் ரத்தமும் சதையுமாக பரிமாறிய கதாசிரியர் அவர். 1967 இல் அவர் எழுதிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் நோபல் பரிசு பெற்றது.

அந்த நாவலின் மூலம் லத்தீன் அமெரிக்கா மீது உலகத்தினரின் கவனம் குவிந்தது. பத்திரிக்கையாளராக வாழ்வைத் துவக்கிய மார்க்வெஸின் படைப்புகளில் அவரது இதழியல் அனுபவங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

புனைவில் ஒரு உண்மை இருந்தால் கூட போதும், புனைவு காப்பாற்றப்பட்டு விடும். ஆனால் செய்திக் கட்டுரையைப் பொருத்தவரை ஒரு பொய் மொத்த செய்தியையும் கொன்றுவிடும் என்று அவர் கூறியுள்ளார்.

பத்திரிக்கையாளர்களால் இன்றும் போற்றப்படும் வாசகம் இது.

மார்க்வெசுக்கு வயது 87.