முகக்கவசங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு என்ன விதிமுறைகள் .: மத்திய,மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..

முகக்கவசம் உற்பத்தி, விற்பனை தொடர்பாக விதிமுறை உருவாக்கக் கோரிய மனுவுக்கு மத்திய,மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முகக்கவசம் பயன்படுத்துதல், அப்புறப்படுத்துதல் தொடர்பாக என்ன வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.