மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா?..

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அன்மையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகிதம் எள் ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றியது.
தமிழக அரசின் சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் ஒப்புதல் தர தாமதிப்பதால் உள்ஒதுக்கீடு அமலாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
செப்.15-ல் சட்டப்பேரவையில் உள்ஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.
ஆளுநருக்கு அனுப்பப்பட்டு 3 வாரம் ஆகியும் ஒப்புதல் கிடைக்காததால் உள்ஒதுக்கீட்டை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்துவருகிறது.