மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு: அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்…

நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டு வர தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்வது குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

அதில், அரசு பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலை, வாழ்க்கை தரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கலாம் என பரிந்துரை வழங்கியிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள் இட ஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டம் கொண்டு வர, இன்று முதல்வர் இ.பி.எஸ்., தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.