முக்கிய செய்திகள்

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடியும் விளம்பர பிரியர்கள் : காங்., செய்தி தொடர்பாளர் குஷ்பு

பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விளம்பர பிரியர்களாக திகழ்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ விமர்சித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில், உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

இதில், இந்திய வரலாற்றில் முதல் நபராக சாதி மதம் துறந்த வழக்கறிஞர் சினேகாவுக்கு தியாகி தில்லையாடி வள்ளியம்மை விருது மற்றும் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழியை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய குஷ்பூ, அயோத்தி விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை பாரதிய ஜனதா கட்சி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தக் கூடாது என்றார்.

பிரதமர் மோடியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் விளம்பர பிரியர்களாக திகழ்வதாக விமர்சித்த குஷ்பூ, அபிநந்தனின் புகைப்படத்தை வைத்து பாஜகவினர் அரசியல் செய்வது அவமானகரமானது என்றார்.