மியான்மரில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு..

மியான்மரில் இன்று காலை 5.31 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது.

இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை