பாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு பெண்கள் ஆணையம் எங்களுக்கு கட்டளையிடக் கூடாது: பிரதமருக்கு பாதிரியார்கள் கடிதம்

பாவமன்னிப்பு முறையை ஒழிக்குமாறு தேசிய பெண்கள்  ஆணையம் தங்களுக்கு கட்டளையிடக் கூடாது என கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள பாவமன்னிப்பு கேட்க வந்த தமது மனைவியை 5 பாதிரியார்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஒருவர்  எழுதிய கடிதம் நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பியது.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா, தேவாலயங்களில்  பெண்கள் பாவமன்னிப்பு கோரும் போது கூறும் அந்தரங்க விஷயங்களை பாதிரியார்கள் சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துவதாக கூறியுள்ளார்.

பாவமன்னிப்பின் போது கூறப்படும் அந்தரங்க விஷயங்களைப் பயன்படுத்தி பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் பாதிரியார்கள் மிரட்டக் கூடும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால். தேவாலயங்களில் பாவமன்னிப்பு முறையை கைவிட நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாதிரியார்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்தது. இதுகுறித்து கேரள கத்தோலிக்க பாதிரியார்கள் கூட்டமைப்பு பிரதமருக்கு எழுதியிருப்பதாக, திருவனந்தபுரத்தில் உள்ள லத்தீன் ஆர்ச்டியோசீஸ் தேவாலய பாதிரியார் சூசை பாக்கியம் தெரிவித்துள்ளார். மேலும். பாவமன்னிப்பு முறையை கைவிடுமாறு பெண்கள் ஆணையம் எங்களுக்கு கட்டளையிடக் கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

NCW chairperson shouldn’t dictate that you abolish this: Kerala Archbishop