முக்கிய செய்திகள்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிப்பு….


மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி பதிலுரை அளித்தார். பின்ன பேசிய தெலுங்கு தேசம் எம்.பி பிரதமர் நல்ல நடிகர் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பின், தற்போது தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது.

இதில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 126 வாக்குகளும்,எதிராக 325 வாக்குகளும் பதிவாகின. தேலுங்கு தேச உறுப்பினரால் கொண்டுவரப்பட்ட மத்திய அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியடைந்தது.

பிரதமர் நரேந்திர மோடி அரசுக்கு ஆதரவாக, நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக அதிமுக எம்பிக்கள் வாக்களித்தனர்