முக்கிய செய்திகள்

ஒக்கி புயல் லட்சத்தீவை நோக்கி நகர்வு..


கன்னியாகுமரி மற்றும் தென் மாவட்டங்களில் கனமழையைக் கொட்டி கடுமையாக அச்சுறுத்தி வந்த ஒகி புயல் தற்போது குமரியை விட்டு விலகி திருவனந்தபுரத்துக்கு 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் தற்போது குமரி மாவட்டத்தில் ஒகி புயலின் தாக்கம் குறையும். எனினும் அடுத்த 12 மணிநேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் புயலின் தாக்கம் இருக்காது, மழை படிப்ப டியாக குறையும் வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.