ஓகி புயல் பாதிப்பு குறித்து முதல்வரிடம் பிரதமர் தொலைபேசியில் பேச்சு..


தமிழகத்தின் தென் மாவட்டங்களை கடுமையாக தாக்கிய ஓகி புயல், மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார்.

தமிழகத்திற்கு தேவையான உதவிகளையும் செய்யத் தயார் என முதல்வரிடம் பிரதமர் உறுதியளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.