முக்கிய செய்திகள்

2018 பிப்., வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை : தமிழக அரசு..


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 15 நாட்களுக்குள் நடத்த வலியுறுத்தி கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு விசாரணையின் போது தமிழகத்தில் தொகுதி மறுவரையறை இன்னும் முடிவடையவில்லை. இதனால் தமிழகத்தில் 2018 பிப்ரவரி மாதம் வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. வழக்கு விசாரணை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.