பெரியாரின் பெருந்தொண்டர் சு.ஒளிசெங்கோ: திருவாரூரில் ஆவணப்படம் வெளியீட்டு விழா

புதுவை இளவேனிலின் முயற்சியில், தயாரிப்பில் உருவான பெரியார் சிந்தனைகளில் இளம் வயது முதல் இன்று வரை ஊறி, அவர் வழியிலேயே பயணித்து வரும் பெரியவர் சு. ஒளிச்செங்கோ பற்றிய ஆவணப்படம் “பெருந்தொண்டர்”. ஆகஸ்ட் 13 அன்று திருவாரூரில் நடைபெறும் விழாவில், நண்பர் ஜெயகாந்தனின் பேரன்பால் வெளியிடப்படுகிறது.

இந்து தமிழ் நாளிதழில் (மார்ச் 6, 2020) ஆர்.சி. ஜெயந்தன் அந்தப் படத்தைப் பற்றி எழுதிய விமர்சனத்தில் இருந்து சிறு பகுதி…

தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில், ஒளிப்பதிவு செய்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘பெருந்தொண்டர்’ என்ற இந்த ஆவணப்படம்.
பெரியாரது மூத்த தொண்டர்களில் ஒருவரான ஒளிச்செங்கோ என்பவரின் வாழ்க்கை வழியாக, சுயமரியாதை இயக்கம் முன்னெடுத்த சமூகநீதிக்கான போராட்டங்களும் பரப்புரைகளும் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏற்படுத்திய தாக்கங்களை வியத்தகு முறையில் நினைவூட்டுகிறது.

திருவாரூருக்கு மிக அருகில் இருக்கிறது சோழர்காலக் கோயிலைக் கொண்ட கிராமமான கண்கொடுத்தவனிதம். அங்கே வசிக்கிறார் 80 வயது ஒளிச்செங்கோ.
எட்டு முழ வேட்டியும் தோளில் வெண் துண்டும் முறுக்கிய மீசையுமாக அறிமுகமாகிறார். அவர் பேசப் பேச, அது தன் வரலாறு என்பதைத் தாண்டி, அன்றைய தஞ்சை மண்ணுக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது.
ஆவணப்பட லிங்க்: