பிரபல பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் காலமானார்..

பிரபல தமிழ் பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் (78)உடல்நலக் குறைவால் காலமானார்.இவர் தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடியுள்ளார். இவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நிறைய பக்தி பாடல்கள்,கிராமிய பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். 2003 ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசு கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.