முக்கிய செய்திகள்

புதுச்சேரியின் காங்கிரஸ் வேட்பாளராக வைத்தியலிங்கம் அறிவிப்பு …

புதுச்சேரியின் காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒரே ஒரு மக்களவை தொகுதி உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளரை அறிவித்துள்ளது.

புதுச்சேரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிட உள்ளதாக அக்கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைத்திலிங்கம் தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதற்கான கடிதத்தை துணை சபாநாயகர் சிவகொழுந்துவிடம் அவர் கொடுத்துள்ளார்.

மேலும் இன்று மதியம் 12.45 மணிக்கு மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான அருணிடம் தனது வேட்பு மனுவை வைத்தியலிங்கம் தாக்கல் செய்கிறார்.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் வைத்தியலிங்கம் இரண்டு முறை புதுச்சேரி மாநிலத்தின் முதலமைச்சராகவும், 7 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.