புதுக்கோட்டை மாவட்டத்தைப் புரட்டி போட்ட கஜா புயல்..

நாகை மாவட்டத்தில் ஏற்பட்ட பேரழிவு போல் புதுக் கோட்டை மாவட்டத்தையும் புரட்டிப் போட்டது கஜா புயல். புதுக்கோட்டை மாவட்டத்தின் பொருளாதாரத்தையே காவு வாங்கிவிட்டது. பெரும் பொருட் சேதத்தையும் பேரழிவையும் ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பேராவூரணி அறந்தாங்கி,திருமயம் ஓன்றியத்தில் தேனிப்பட்டி புதுப்பட்டி, கல்லுார், அரிமளம் என அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களையும் ,தென்னை உட்பட அனைத்து மரங்களையும் சூறையாடி சென்றுள்ளது. பல கிராமங்கள் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் தான் இருக்கிறது

இப்பகுதிகளில் தென்னையே பிரதான வருமானம் தந்து கொண்டிருந்தது, ஆனால் அந்த தென்னந் தோப்புகளையும் அழித்து விட்டு சென்று விட்டது.

அறுவடைக்கு தயாராக இருந்த பல கரும்பு வயல்கள் முற்றிலும் அழிந்து விட்டது. வாழை மரங்கள் சாய்ந்து வாழை விவசாயிகளின் பொருளாதாரத்தையே முடக்கி போட்டு விட்டது.

மதிப்பு மிகுந்த தேக்கு மரங்கள் வேரோடு சாய்ந்து போயின.

இந்த பாதிப்பிலிருந்து விவாசாயிகள் எப்படி மீளப் போகிறார்கள் என்பதே பெரிய கேள்விக் குறியாக அமைந்து விட்டது.

ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டித்துப் போனது.பாதிக்கப்பட்ட பகுதிகளின் தற்போது வரை மின்சாரம் சீர் செய்யப்படவில்லை கடந்த இரண்டு நாட்களாக இப்பகுதி மக்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

அரசு போர்கால அடிப்படையில் செயல் பட்டாலும் பேரழிப்பு ஆறாத வடுவாக மாற்றியுள்ளது.