முக்கிய செய்திகள்

ஆர்.கே.நகரில் பணத் திருவிழா : வாவ்..ஓட்டுக்கு ரூ.10 ஆயிரமாம்…


இடைத்தேர்தல் நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் உளவுத்துறையின் உதவியுடனேயே 80 சதவீதம் வீடுகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் நடைபெற உள்ளது. கடந்த முறை ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பணப்பட்டுவாடா காரணமாக ரத்துசெய்யப்பட்டதைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.

இருப்பினும் இந்த ஆண்டும் பணப்பட்டுவாடா சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், சனிக்கிழமை மாலை ஆளும் கட்சியின் சார்பில் ஆர்.கே.நகரில் வீடுவீடாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாகவும் அதற்கு சென்னை மாநகர உளவுத்துறையின் உயர் அதிகாரி ஒருவரே உடந்தையாக இருந்ததாகவும் தகவல் கசிந்துள்ளது.

சென்ற முறை போல நிறைய பேரை பணப்பட்டுவாடாவுக்கு அனுப்பாமல் குறிப்பட்ட சில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் மட்டும் வீடுவீடுடாகப் போய் பணத்தை கொடுக்க திட்டம் தீட்டப்பட்டது. பணம் கொடுக்கச் செல்பவர்கள் 2 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.