முக்கிய செய்திகள்

இராதாபுரம் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை.: உயர்நீதிமன்றம் அதிரடி..

கடந்த 2016 -ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நெல்லை மாவட்டம் இராதபுரத்தில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி

அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை வழங்கியுள்ளது

இந்த உத்தரவின்படி மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டால் அப்பாவு வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே திமுகவுக்கு மேலும் ஒரு எம்.எல்.ஏ கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

வரும் அக்.,4-ந்தேதி தாபல் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.