மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்: பாஜகவினர் கூச்சல்..

மக்களவையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் காந்தி ஆற்றிய உரைக்கு பாஜக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களவையில் நடந்த பட்ஜெட் குறித்த விவாதத்தில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி உரையாற்றினார்.

அதில், இந்தியாவை வழிநடத்தும் நான்கு பேருக்காக இந்த சட்டம் இயற்றப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இந்த சட்டமானது விளைப்பொருட்களை பதுக்கவும், மண்டி முறையை ஒழிக்கவும்

வழிவகை செய்வதாக விமர்சித்தார்.இந்தியாவை நான்கு பேர்தான் வழிநடத்துகிறார்கள்,
வேளாண் சட்டங்களால் இந்தியாவில் தானிய மார்க்கெட்டுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று மக்களவையில் ராகுல்காந்தி கூறியுள்ளார். வேளாண் சட்டங்களின் உள்ளடக்கம் முழுவதையும் நாம் ஆராய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும் எனவும் மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்.