முக்கிய செய்திகள்

இராஜபாளையத்தில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டிகள் தொடங்கியது..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ குழுமம் நடத்தும் சர்வதேச அளவிலான பைடு ரேட் சதுரங்க போட்டிகள் இன்று காலை 11.30 அளிவில் தொடங்கியது.

இப்போட்டிகள் வரும் டிசம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. போட்டியில் 300 சதுரங்க வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

ராம்கோ பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்கபோட்டியை மாநில சதுரங்க கழக செயலாளர் திரு.ஸ்டீபன் பால்ராஜ் தொடங்கி வைத்தார்.

விழாவில் விருதுநகர் மாவட்ட சதுரங்க சங்க தவைரும்,இராஜபாளை சதுரங்க சங்க தலைவருமான திரு. கோபால் சாமி குத்துவிளக்கேற்றி விழாவின் முதல் போட்டியைத் தொடங்கி வைத்தார்.

போட்டி ஏற்பாடுகள் ராம்கோ குழும சேர்மனும்,ராம்கோ பொறியியல் கல்லுாரி தாளாளருமான் திரு. பி.ஆர்.வெங்கட்ராம் ராஜா அவர்களின் வழிகாட்டுதலின்படி

ராம்கோ பொறியியல் கல்லுாரி உடற்கல்வித்துறை இயக்குனர் திரு வீரமணி அவர்கள் தலைமையில் கல்லுாரி நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இந்த சதுரங்க போட்டியில் முதல் பரிசு ரூ.70,000.. மொத்தப் பரிசுத் தொகை ரூ.5,00,000

போட்டியில் வெற்றி பெற்றோருக்கு வரும் டிசம்பர்-2 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

சதுரங்க போட்டியைக் காண விரும்பும் சதுரங்க ஆர்வலர்களை வரவேற்கிறோம்.

மெ.மெய்யப்பன்,
இராஜபாளையம்