முக்கிய செய்திகள்

ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள் எழுத உள்ளனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 12 லட்சத்து 87 ஆயிரத்து 359 மாணவர்கள் எழுதுகின்றனர்.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைகிறது.

மார்ச் 3-ம் தேதி தொடங்கும் 10-ம் வகுப்பு தேர்வுகள் 29-ம் தேதி முடிவடைகிறது. வழக்கத்திற்கு மாறாக ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

இவ்வாறு சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.