2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்கும் திட்டம் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்..

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவியை பெறுவர்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி உதவி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

அதற்கு அடையாளமாக, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷா என்கிற திருநங்கை உள்பட 32 பேரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி உதவிக்கான சான்றிதழை முதலமைச்சர் வழங்கினார்.

இதை அடுத்து சேலம் சூரமங்கலம் பேருந்து நிலையத்தில் அம்மா சுற்றுச்சூழல் அரங்கு, சேலம் மாநகராட்சியில் முடிவுற்ற 307 சாலைகள் சீரமைப்பு திட்டம்,

கோட்டை பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.