ஊரக உள்ளாட்சி தேர்தல்: அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் 6-ம் தேதி ஆலோசனை..

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் 6ம் தேதி அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவுள்ளது.
9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப்பணிகள் குறித்து மாநில தேர்தல் ஆணையம் விளக்கும் என கூறப்படுகிறது.