சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை கேரள அரசு முடிவு..

புகழ் பெற்ற சபரி மலை ஐயப்பன் கோயில் கொரானா பாதிப்பு காரணமாக அமல் படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் மூடியிருந்தது.

தற்போது கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில்ஆனி மாத பூஜை மற்றும் திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தந்திரியின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தனர்.

மாசி மாத பூஜைகளுக்கு பின்னர் சபரிமலையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட நாட்களில் நடை திறந்து பூஜை, சடங்குகள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆனி மாத பூஜைகளுக்காக வரும் 14-ம் தேதி நடை திறக்கும் போது பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பக்தர்களை அனுமதிப்பது உகந்ததாக இருக்காது என்றும்,

திருவிழா மாற்றி வைக்க வேண்டும் என்றும் கூறி தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு தேவசம்போர்டு ஆணையருக்கு கடிதம் அனுப்பினார்.

இதனால் விருச்சுவல் கியூ முன்பதிவு நடைபெறவில்லை. இது பற்றி ஆலோசிக்க நேற்று அவசர கூட்டம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் தேவசம்போர்டு தலைவர் வாசு , தந்திரி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பாதிப்பு அதிகமாகி கொண்டிருக்கும் நிலையில் பக்தர்களை சபரிமலையில் அனுமதிக்க வேண்டாம் என்று தந்திரி கூறியதை அரசு ஏற்றுக்கொள்கிறது.

ஆனி மாத பூஜையில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. திருவிழாவில் சடங்குகள் மட்டுமே நடைபெறும். அதிலும் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

பிராந்தி கடைகளை திறந்த அரசு கோயில்களை ஏன் திறக்கவில்லை என்று காங்., மற்றும் பா.ஜ., வினர் கேள்வி எழுப்பினர்.
மத தலைவர்களுடன் பேசி கருத்து ஒற்றுமை ஏற்படுத்திய பின்னர், மத்திய அரசின் வழிகாட்டுதல் படி கோயில்களை திறக்க அரசு முடிவு செய்தது.

வெளிமாநில பக்தர்கள் கோவிட்-19 நெகட்டீவ் சான்றிதழுடன் வந்தாலும் யாருக்காது பாதிப்பு இருந்தால் சபரிமலை கோயில் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்டு விடும். அதனால் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரருவிடம், பக்தர்களை அனுமதிக்க ஏதாவது மட்டத்தில் இருந்து வற்புறுத்தல் இருக்கிறதா என்று கேட்ட போது அப்படி எந்த நிர்ப்பந்தமும் இல்லை, நிலைமை சரி இல்லாததால் மறுபரிசீலனை தேவை என்பதை மட்டும் கூறினேன் என்றார்.

அரசு மற்றும் தேவசம்போர்டுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தந்திரி கூறினார்.