சபரிமலையில் பெண்களுக்கு நவ.,16-ம் தேதி முதல் அனுமதிக்க ஏற்பாடுகள் தீவிரம்…

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத்தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது. தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன. எனினும் தீர்ப்பை அமல்படுத்தப்போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அதன் தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என மாநில அரசு முடிவெடுத்துள்ளதால் அதனை தேவசம்போர்டு ஏற்றுக் கொள்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களை நாங்கள் தடுக்கவும் மாட்டோம். கேரளாவில் தற்போது மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதால் உடனடியாக பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க முடியாத சூழல் உள்ளது. எனவே இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.

எனவே சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பர் 16-ம் தேதி முதல் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதலாக 600 கழிப்பறைகளும், ஓய்வறைகளும் கட்டப்படும்’’ என பத்மகுமார் கூறினார்.

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. 10 முதல் 50 வயதுடைய பெண்கள் 48 நாட் கள் விரதம் இருக்க முடியாது என்பதாலும், மாதவிடாய் காலத்தில் அவர்கள் கோயிலுக்குள் நுழையும்போது கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என்றும் காரணம் தெரிவித்து கோயில் நிர்வாகத்தால் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.

இந்த நடை முறையை எதிர்த்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பெண்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

எனவே சபரிமலை கோயிலுக்கு செல்லும் உரிமை அனைத்து வயது பெண்களுக்கும் உள்ளது’’ என தீர்ப்பளித்தது.

தீர்ப்புக்கு, ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

எனினும் தீர்ப்பை அமல்படுத்தப்போவதாக கேரள அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சபரிமலை கோயிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் அதன் தலைவர் பத்மகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான உத்தரவுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டாம் என மாநில அரசு முடிவெடுத்துள்ளதால் அதனை தேவசம்போர்டு ஏற்றுக் கொள்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று சபரிமலைக்கு வரும் பெண்களை நாங்கள் தடுக்கவும் மாட்டோம்.

கேரளாவில் தற்போது மழை வெள்ள சேத பணிகள் நடந்து வருவதால் உடனடியாக பெண்களுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்க முடியாத சூழல் உள்ளது.

எனவே இம்மாதம் 17-ம் தேதி நடைபெறும் ஐப்பசி மாத பூஜைக்கு பெண்களை அனுமதிக்க வாய்ப்பு இல்லை.

எனவே சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசன் முதல் பெண்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நவம்பர் 16-ம் தேதி முதல் பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும்.

தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில் கூடுதலாக 600 கழிப்பறைகளும், ஓய்வறைகளும் கட்டப்படும்’’ என பத்மகுமார் கூறினார்.