முக்கிய செய்திகள்

சசிகலா புஷ்பாவிற்கு வரும் மார்ச் 26ம் தேதி திருமணம் ?


அ.தி.மு.க., மாநிலங்களவை உறுப்பினர்., சசிகலா புஷ்பாவிற்கு வரும் மார்ச் 26ம் தேதி திருமணம் என்று வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. சசிகலாபுஷ்பாவிடம் கருத்து கேட்பதற்காக அவரை தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவரின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம், ’அவருக்கு திருமணம் நடக்க இருப்பது உண்மைதான்’ என்றனர்.