சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழா : பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தல்..

சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில் பாராம்பரிய கலை நிகழ்ச்சியுடன் வரவேற்று அசத்தினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே விசாலயன்கோட்டையில் அமைந்துள்ள சேது பாஸ்கரா வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2-வது பட்டமளிப்பு விழா,அதனுடன் விழுது வழங்கும் விழா கல்லுாரி கலை அரங்கில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
விழாவிற்கு கல்லுாரி தாளாளர் சேது.குமணன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கருணாநிதி வரவேற்றார்.
விழாவில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தொடக்கவுரை நிகழ்த்தினார். பட்டம் பெற்ற 41 மாணவ-மாணவிகளுக்கு ஓய்வு பெற்ற காவல்துறை இயக்குனர் ரவி பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அவர் பட்டம் பெறும் மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பலநல்வாய்ப்புகள் உள்ளன. எதிர்கால இலக்காக உங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து அதில் கவனம் செலுத்துங்கள் அப்போதுதான் உங்கள் எண்ணம் இடேறும்,இலக்கினை எளிதில் அடைய முடியும். அதிக மதிப்பெண்களால் மகிழ்ச்சியடைவது உண்மைதான்,ஆனால் அதுவே உங்க ள் வாழ்க்கையைத் தீர்மானித்துவிடாது. கல்வியினால் பெற்ற அறிவும், அதன் மூலம் நீங்கள் வெளிப்படுத்தும் உழைப்பும்,திறமையும் உங்களுக்கு சமூகத்தில் உயர்வைத் தரும். சமூக வலைத்தளங்களை மாணவர்கள் தேவைக்கேற்ப பயன்படுத்திப் பழகுங்கள். இன்ப துன்பங்களை சமமாகக் கருதுங்கள், அவை நிலையானதல்ல மாறிக் கொண்டே இருக்கும், எப்போதும் மகிழ்சியான மனநிலையிருக்க கற்றுக்கொள்ளங்கள். அவை உங்கள் பணிகளை எளிதாக்கும். நட்பு வட்டத்தை விரிவாக்கும், அவை உங்கள் சாதனைக்கு துணை நிற்கும் என்று பேசினார்.

அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் முனைவர் சுப்பையா பேசும் போது,
நேரத்தை மதிக்க தெரிய வேண்டும், உன்னால் முடியும் என்ற நம்பிக்கையை விதைக்க கூடிய நண்பர்களை தேர்வு செய்து நட்பு வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் படித்த படிப்பு விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு பயன் உள்ளதாகவும் அமைய வேண்டும்.நம்பிக்கை இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பெங்களுரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் செங்கப்பா, அமெரிக்காவில் உள்ள புளோரிடா பல்கலைக்கழக இளைஞர் நலன் மற்றும் சமுதாய அறிவியல் துறை பேராசிரியர் முத்துசாமி குமரன் ஆகியோர் பேரூரை நிகழ்த்தினர்.
விழாவில் தமிழர் கலைகளைப் பறைசாற்றும் வகையில் பாராம்பரியக் கலைஞர்களை வைத்து கரகாட்டம்.ஒயிலாட்டம்.பொய்க்கால் குதிரையாட்டம் என வரவேற்பு நிகழ்த்தியது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
செய்தி & படங்கள்
சிங்தேவ்