தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஏப்ரல் 26-ம் தேதி மாறக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மீனவர்கள் ஏப்.26-ம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என பாலசந்திரன் தெரிவித்தார்.