திமுக தலைவராக போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு..


திமுகவின் தலைவராக இருந்த கலைஞர் கருணாநிதி அவர்கள் மறைவையடுத்து திமுக தலைவர் பதவிக்கு இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மு.க. ஸ்டாலின் வேறு யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யாததால் போட்டியின்றி செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் திமுகவின் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது போல் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட முதன்மை செயலாளர் துரை முருகனும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.

திமுக தலைவர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார். தலைவர் பதவிக்கு மு.க ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரை முருகனும் போட்டியிடுகின்றனர்.

இன்று வேட்புமனு தாக்கல் செய்வதை ஒட்டி காலை மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்த மு.க ஸ்டாலின், வேட்புமனுவை வைத்து ஆசி பெற்றார். அதேபோல, துரை முருகனும் தனது வேட்புமனுவை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனை அடுத்து, அவர்கள் அண்ணா அறிவாலயம் வந்த அவர்கள் வேட்புமனுவை அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதியிடம் தாக்கல் செய்தனர். ஸ்டாலினை 65 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிந்துள்ளனர்.

எதிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.