திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின்..

திமுகவின் பொதுக்குழு இன்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. கலைஞர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் க.அன்பழகன் முறைப்படி திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து திமுகவின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப் பேற்றுக் கொண்டார்.

அவருடன் திமுகவின் பொருளாளராக துரை முருகனும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு க.அன்பழகன் வாழ்த்து தெரிவித்தார்.