முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.28,664 கோடி மதிப்பிலான 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..

தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க ரூ.28,664கோடி முதலீட்டில், 55,054 வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கிண்டி தனியார் விடுதியில் அமைக்கப்பட்டுள்ள “முதலீட்டாளர்களின் முதல் முவகரி தமிழ்நாடு ”(Made In Tamilnadu) காட்சி அரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார் .
பின்னர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு விழா நடைபெற்றது. ரூ.28,508 கோடியிலான 49 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த புதிய திட்டங்களால் 83,482 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும் என கூறப்படுகிறது.
ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தி, லாஜிஸ்டிகஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 28 ஆயிரத்து 664 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்த்திட, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. குறிப்பாக, Capital land, Adhani, JSW உள்ளிட்ட நிறுவனங்களும் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

இந்த நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர். அதுமட்டுமின்றி, 14 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்..