மாணவி வளர்மதி புழல் சிறையில் 4-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்..


பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாணவி வளர்மதி புழல் பெண்கள் சிறையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவுவதற்காக பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் சார்பில் நிதி திரட்டப்பட்டது.

அப்போது அங்கு வந்த நுண்ணறிவு பிரிவு ஏட்டு ஸ்டாலின், மாணவி வளர்மதியை வக்கிரமாக புகைப்படம் எடுத்து, தரக்குறைவாக பேசி, மார்பகத்தை பிடித்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட மோதலில், நிதி வசூலில் ஈடுபட்ட வளர்மதி தரப்பினர் ஏட்டு ஸ்டாலினை தாக்கியுள்ளனர். இதையடுத்து, ஏட்டு ஸ்டாலின் புகாரின் பேரில் பொதுநல மாணவர் இயக்கத்தின் செயலாளரான மாணவி வளர்மதி (23) மற்றும் அந்த இயக்கத்தை சேர்ந்த அருந்தமிழன், காளிமுத்து, சாஜன், மணிகண்டன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.