டெல்லியில் பிரதமர் மோடி- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு …

டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். அவரிடம் பல்வேறு கோரிக்கைகளை வைக்கவுள்ளதாக தெரிகிறது.

டெல்லியில் நாளை மறுநாள் திறக்கவுள்ள திமுக அலுவலகத் திறப்பு விழாவிற்கு அழைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரை சந்திக்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார். அதுபோல் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக மாநிலங்களவை,மக்களவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்.