முக்கிய செய்திகள்

தமிழக எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருது..

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளரும், மூத்த படைப்பாளியுமான சோ.தர்மனின் சூழ் நாவலுக்கு, சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர் கொண்ட தர்மன், கோவில்பட்டி தாலுகாவில் உள்ள உருளைகுடி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், வேளாண் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் விதங்களில் கரிசல் மண் சார்ந்த புதின, சிறுகதை எழுதி இருக்கிறார்.

ஈரம், தூர்வை, சோகவனம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். சோ.தர்மன் எழுதிய “கூகை” என்ற நாவல், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டுக்கான பரிசு பெற்றது.

அந்த வரிசையில், விவசாயம் செய்யும் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்த சூல் என்ற நாவலுக்காக 2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் சோ.தர்மனுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.