முக்கிய செய்திகள்

தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதி அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்..

தமிழகத்தில் இன்று 1438 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். மொத்த பாதிப்பு 28,694 ஆக உயர்ந்தது.

தமிழகத்தின் இன்று, 1,438 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 28,694 ஆகவும், மேலும் 12 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 232 ஆகவும் அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: தமிழகத்தில் இன்று 1,438 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

அதில், 33 பேர் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். ஒரே நாளில் 15,692 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழகத்தில் மட்டும் 5,60, 673 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இது தான் இந்தியாவில் அதிகம். இன்று 861 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதன் மூலம் 15,762 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். 12697 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்..

தனியார் பரிசோதனை மையங்களுக்கு ஐ.சி.எம்.ஆர்., நிர்ணயித்த 4,500 ரூபாய் கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக குறைத்துள்ளோம். கொரோனா பாதிப்பு விவரங்களை வெளிப்படை தன்மையுடன் சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.

இறப்பு, பரிசோதனைகள் குறைத்து சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தடுப்பூசி, மருந்துகள் இல்லாமல் உயிர்காக்கும் வழிமுறைகளை அரசு பின்பற்றுகிறது. ஆக்கப்பூர்வமான கருத்துகள், ஆலோசனைகளை கூறினால் ஏற்க அரசு தயாராக உள்ளது.

பிசிஜி தடுப்பூசி மூலம் கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி பெற்றுள்ளோம். 30 தனியார் மருத்துவமனைகளை ஒருங்கிணைத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் கொரோனா உறுதியானவர்களில் 17, 815 பேர் ஆண்கள். 10,862 பேர் பெண்கள். 17 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 12 வயதுவரை உள்ளவர்களில், 1,571 பேரும், 13 முதல் 60 வயது வரை உள்ளவர்களில், 24, 211 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 2,912 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச விமானங்கள் மூலம் வந்தவர்களில் 120 பேருக்கும், உள்நாட்டு விமானம் மூலம் வந்தவர்களில் 35 பேருக்கும், ரயில் மூலம் வந்தவர்களில் 257 பேருக்கும், நடந்தும், சொந்த வாகனங்களில் வந்தவர்களில் 257 பேருக்கும்,

பஸ் மூலம் வந்தவர்களில் 1,360 பேருக்கும், கப்பல் மூலம் வந்தவர்களில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
சர்வதேச, உள்நாட்டு விமானங்கள், ரயில், சொந்த வாகனங்கள், பஸ், கப்பல் மூலம் வந்த 1,33,562 பேரில் 1,773 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது.