தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியயீடு..

தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது..

வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள வசதியாக, கடந்த ஆண்டு செப்டம்பர் ஒன்றாம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதையடுத்து செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும் லட்சக்கணக்கான மனுக்கள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு வெளியிட்டார்

சென்னை மாநகராட்சி அலுவலகங்களிலும், மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.